சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஆனது ஒரு குறுங்கோள் ஒன்றிற்குப் பேராசிரியர் ஜெயந்த் மூர்த்தியின் பெயரைச் சூட்டியுள்ளது.
2005 EX296 (215884) என்ற குறுங்கோளிற்கு ஜெயந்த் மூர்த்தி எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இந்த குறுங்கோள் ஆனது (215884), செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள சுற்றுப்பாதையில் 3.3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.
சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறிய அமைப்புகளின் பெயரிடல் மீதான பணிக் குழுவானது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்துக் குறுங்கோள்கள், பல்வேறு வால் நட்சத்திரங்கள் மற்றும் இதர பிற சிறியப் பொருட்களுக்கு என்று அதிகாரப் பூர்வப் பெயர்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.