2024 LB4 என அடையாளம் காணப்பட்ட (குறிப்பிடப்பட்ட) குறுங்கோள் ஆனது பூமியை நெருங்கி வருவதை நாசா கண்டறிந்தது.
சுமார் 98 அடி விட்டம் கொண்ட இந்தக் குறுங்கோளின் அளவானது தோராயமாக வணிகப் பயன்பாட்டு விமான அளவினை ஒத்தது.
இந்தக் குறுங்கோள் ஆனது நிலவு இருக்கும் தொலைவினை விட பூமிக்கு அருகில் 173,000 மைல்கள் தொலைவில் கடந்து சென்றது.
ஒரு குறுங்கோள் ஆனது பூமியிலிருந்து 4.6 மில்லியன் மைல்கள் வரம்பிற்குள்ளும் மற்றும் 150 மீட்டருக்கும் அதிகமான பரப்பினைக் கொண்டதாகவும் இருந்தால் அது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
இது மிகவும் நெருக்கமாக இருந்தாலும், குறுங்கோள் 2024 LZ4 ஆனது, மிகவும் சிறியது என்பதால் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை.