2021 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட லூசி விண்கலம் ஆனது, டிங்கினேஷ் எனப் படும் சிறிய குறுங்கோளினை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது.
இது ஒரு குறுங்கோள் அல்ல என்றும் 220மீ அகலம் கொண்ட ஒரு சிறிய துணைக்கோள் அதைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கின்ற ஒரு இரட்டை அமைப்பு என்றும் கண்டறிந்து உள்ளது.
டிங்கினேஷ் ஒரு அரை மைல் (790 மீட்டர்) நீளம் கொண்டது.
அதனை நெருக்கமாகச் சுற்றி வரும் துணைக்கோள் ஆனது அளவில் ஒரு மைலில் பத்தில் ஒரு பங்கு (220 மீட்டர்) அளவு மட்டுமே உள்ளது.
இந்த ஆய்வுத் திட்டத்தின் முக்கிய இலக்குகள் ஆனது, ட்ரோஜான்கள் எனப்படும் எட்டு குறுங்கோள்களின் குழுவாகும்.
இந்த விண்கலம் ஆனது, 2027 ஆம் ஆண்டில் ட்ரோஜன் குறுங்கோள்கள் என்று அழைக்கப் படும் இந்த குறுங்கோள்களில் முதலாவது கோளினை அடைந்து குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு அவற்றில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
ஏழு குறுங்கோள்கள் அடங்கிய முதல் இலக்குகள் தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது.