உள்துறை அமைச்சகம் ஆனது 2023-24 ஆம் ஆண்டு குறை தீர்ப்பு மதிப்பீட்டுக் குறியீட்டில் (GRAI) இடம் பெற்றுள்ள முதல் 10 அமைச்சகங்களுள் ஒன்றாக தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
இது குறிப்பிட்ட 15 குறிகாட்டிகளிலும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.
2023-24 ஆம் ஆண்டில், 48,837 பொதுக் குறைகளை நிவர்த்தி செய்து உள்துறை அமைச்சகம் சிறப்பாகச் செயலாற்றியுள்ளது.
இது குறை தீர்ப்பிற்காக நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பதிலாக எட்டு நாட்கள் என்ற சராசரி குறை தீர்ப்பு காலத்திற்குள் தீர்வினை வழங்கியுள்ளது.