குறைந்த அதிர்வெண் தொகுப்பைப் (LOFAR) நன்கு பயன்படுத்தி ஒரு புதிய ரேடியோ அண்டத்தினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது J0011+3217 என குறிப்பிடப்படுகிறது.
ரேடியோ அண்டங்களின் மத்திய மையங்களில் இருந்து அதிக அளவு ரேடியோ அலைகள் உமிழப் படுகின்றன.
இந்த அண்டங்களின் மையப்பகுதியில், கருந்துளைகள் ஆனது வாயு மற்றும் தூசிப் படலங்களைத் திரட்டி, மின்னூட்டம் பெற்றத் துகள்களை மிகவும் அதிக வேகத்தில் செலுத்துகின்ற ரேடியோஅலை உணர்வியில் புலப்படும் வரம்பிலான உயர்-ஆற்றல் கற்றைக்களை உருவாக்குகின்றன.