TNPSC Thervupettagam

குறைந்த விலை வெப்பநிலை வீச்சுப் பொறி

April 5 , 2020 1569 days 578 0
  • மும்பை கப்பல் கட்டும் நிறுவனமானது  குறைந்த விலை கொண்ட ஒரு அகச் சிவப்பு (Infra Red) அடிப்படையிலான வெப்பநிலை உணரியை வடிவமைத்து உள்ளது.
  • நிறுவனத்தின் முற்றத்தில் இருக்கும் வாயில்களில் நுழையும் பணியாளர்களைச் சோதிக்க இந்த உணரி பயன்படுத்தப்பட உள்ளது.
  • இந்த கருவியானது ரூபாய் ஆயிரத்திற்கும் குறைவான விலையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

வேலை செய்யும் முறை

  • இந்த வெப்பநிலை வீச்சுப் பொறியின்  துல்லிமை (accuracy) 0.2 டிகிரி செல்சியஸ் ஆகும்
  • இந்த வெப்பநிலை வீச்சுப் பொறியானது ஒரு இருமுனைய ஒளி உமிழ்வுப் பலகையையும்  ஒரு அகச்சிவப்பு உணர்வியையும் கொண்டு உள்ளது.
  • அகச்சிவப்பு வெப்பமானியானது அகச்சிவப்பு ஒளியை குவிக்க ஒரு ஒளிவில்லையைப் பயன்படுத்துகிறது.
  • இது கரும்பொருள் கதிர்வீச்சு என்ற கோட்பாட்டின் படி செயல்படுகிறது.
  • 0 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையில் உள்ள எந்தவொரு பொருளும் அதில் தன்னைச் சுற்றி நகரும் மூலக்கூறுகளைக் கொண்டு இருக்கும்.
  • வெப்பநிலையின் அதிகரிப்பிற்கேற்ப இந்த மூலக்கூறுகளின் வேகம் அதிகரிக்கும்.
  • இவ்வாறு நகரும்போது, இந்த மூலக்கூறுகள் அகச்சிவப்புக் கதிர்களை வெளியிடுகின்றன.
  • அகச்சிவப்பு வெப்பமானியில் உள்ள  கண்டறிவி (Detector) ஒரு வெப்பப் பொருளில் (Hot body) இருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்களைக்  குவிக்கிறது.
  • கதிர்கள் அதிகமாக இருந்தால், அந்தக் கண்டறிவி அதிக மின்னோட்டத்தை உருவாக்குகிறது.
  • மின்னோட்டம் அதிகமாக இருந்தால் பொருளின் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்