TNPSC Thervupettagam

குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023

October 14 , 2023 281 days 237 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) ஆனது காலாண்டு தொழிலாளர் வளக் கணக்கெடுப்பின் (PLFS) காலாண்டு அறிக்கையினை வெளியிட்டு ள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத கால கட்டத்தில் 7.6 சதவீதமாக இருந்த நகர்ப் புறங்களில் உள்ள 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத காலக் கட்டத்தில் 6.6% ஆக குறைந்துள்ளது.
  • ஆண்களில், இந்தக் காலக் கட்டத்தில் 7.1 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 5.9% ஆகக் குறைந்துள்ளது.
  • பெண்களில், இந்த காலக் கட்டத்தில் இது 9.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 9.1% ஆக குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான முழு ஆண்டில், ஒரு வருடத்திற்கு முன்பு 3.2% ஆக இருந்த கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2.4% ஆகக் குறைந்துள்ளது.
  • நகர்ப்புறங்களில், அதே காலகட்டத்தில் 6.3% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 5.4% ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 3.2% ஆகக் குறைந்துள்ள நிலையில் இது குறைந்தபட்சம் 2017-18 ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகக் குறைவான விகிதமாகும்.
  • இமாச்சலப் பிரதேசம் (13.8 சதவீதம்), ராஜஸ்தான் (11.7 சதவீதம்), சத்தீஸ்கர் (11.2 சதவீதம்), ஜம்மு காஷ்மீர் (10.9 சதவீதம்) மற்றும் கேரளா (10 சதவீதம்) ஆகிய மாநிலங்களின் நகர்ப்புறங்களில் தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதத்தை விட அதிகமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் பதிவான மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் ஆகும்.
  • தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதத்தை விட குறைவான வேலை வாய்ப்பின்மை விகிதம் பதிவான மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் டெல்லி (2.7 சதவீதம்), குஜராத் (2.8 சதவீதம்), மேற்கு வங்காளம் (4.4 சதவீதம்), பீகார் (6.1 சதவீதம்), மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா  (இரண்டும் 6.5 சதவீதம்) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்