தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையின் கீழ் பாதுகாப்பு பெறும் நெல் விவசாயிகள், மாநிலத்தில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) விவசாயிகளின் சராசரி எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கினர் ஆவர்.
மாநில அரசின் ஆவணங்களின்படி, மொத்தச் சாகுபடி பரப்பளவில் நெல் சாகுபடியின் அளவு 35% ஆகும்.
PM-KISAN என்ற திட்டமானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப் பட்டதோடு நிலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களின் வருமானத்தைப் பெருக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு விவசாயி-பயனாளிக்கும் ஆண்டுக்கு ரூ6,000 ஆனது மூன்று தவணைகளில் வழங்கப் படுகின்றது.
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 48 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் பயனைப் பெறுவதற்காக அதிகாரிகளிடம் பதிவு செய்துள்ளனர்.