தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சராசரியாக 100 அலகு மின்சார 113 ரூபாயாக உள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், மற்ற மாநிலங்களில் மின்சாரச் செலவினம் அதிகமாக - மகாராஷ்டிரா மாநிலத்தில் 643 ரூபாய், இராஜஸ்தான் மாநிலத்தில் 833 ரூபாய், மத்தியப் பிரதேசத்தில் 618 ரூபாய், உத்தரப் பிரதேசத்தில் 689 ரூபாய், மேற்கு வங்காளத்தில் 654 ரூபாய், மற்றும் ஒடிசாவில் 426 ரூபாய் ஆக உள்ளது.
தமிழக விவசாயிகள், முழு மானியத்துடன் கூடிய 2 லட்சம் வேளாண் பயன்பாட்டு நீரேற்றிகள் உள்ளிட்ட இலவச மின்சார வசதிகளைப் பெறுகின்றனர்.
இங்கு விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 அலகு இலவச மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 300 அலகு இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது.
கூடுதலாக, வீடுகளுக்கு 100 அலகு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.