TNPSC Thervupettagam

குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு மசோதா – ராஜஸ்தான்

July 22 , 2023 364 days 270 0
  • ராஜஸ்தான் அரசானது, 2023 ஆம் ஆண்டு குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு மசோதாவினைத் தாக்கல் செய்துள்ளது.
  • அத்தகையச் சட்டத்தினை அறிமுகம் செய்துள்ள முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.
  • இது அந்த மாநிலத்திலுள்ள அனைத்து இளம்பருவ மக்களுக்கும் உறுதி அளிக்கப்பட்ட ஊதியம் அல்லது ஓய்வூதியத்தினை வழங்க உள்ளது.
  • இந்த மசோதாவின் கீழ், அந்த மாநிலத்தின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒவ்வோர் ஆண்டும் 125 நாட்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பினைப் பெறுவர்.
  • முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் ஆகியோருக்கு மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப் படும்.
  • முக்கியமாக, ஒவ்வோர் ஆண்டும் 15 சதவீதம் என்ற அளவில் இந்த ஓய்வூதியமானது  உயர்த்தப் படும்.
  • இந்த மசோதா மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
    • உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச வருமானத்திற்கான உரிமை,
    • உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைக்கான உரிமை, மற்றும்
    • உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கான உரிமை.
  • இதர பிற மாநிலங்களும் கூட நகர்ப்புறப் பகுதிகளுக்காக பல்வேறு வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன, ஆனால் அதே சமயம் அவை நிர்வாக ஆணை மூலமாக மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
  • முதல் முறையாக ஒரு மாநிலத்தில் சட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டம் நிறைவேற்றப் படும்.
  • வெறும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப் படுகின்ற மத்திய அரசால் நிதியளிக்கப் படும் ஓய்வூதியத் திட்டத்தினைப் போல அல்லாமல் இந்தச் சட்டமானது அனைவருக்கும் பயன் அளிக்கக் கூடியதாகும்.
  • மத்திய அரசால் அளிக்கப் படும் ஒரு ஓய்வூதியமானது மாதத்திற்கு 200 ரூபாய் என்ற அளவில் மட்டுமே உள்ளதோடு, இது 2007 ஆம் ஆண்டிலிருந்து அதே அளவில் மட்டுமே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்