ஐக்கிய நாடுகள் சபையின் (UN) குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகளின் (LDC) பட்டியலில் இருந்து முன்னேற்றம் பெற்ற ஏழாவது நாடு பூடான் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையினால் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலின் 2021 ஆம் ஆண்டு மறுமதிப்பாய்வில், வங்காளதேசம், லாவோஸ் மற்றும் நேபாளம் ஆகியவை இப்பட்டியலிலிருந்து நீக்கப் படுவதற்கு பரிந்துரைக்கப் பட்டன.
1971 ஆம் ஆண்டில், பூடான் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகளின் ஆரம்பநிலைப் பட்டியலில் சேர்க்கப் பட்டது.
பூடான் முதலில் 2015 ஆம் ஆண்டில் வெளியேறும் தகுதி பெற தேவையான நிபந்தனைகளை நிறைவு செய்த நிலையில், பின்னர் மீண்டும் 2018 ஆம் ஆண்டில் நிறைவு செய்தது.
பூடான் தனது முன்னேற்றத் தகுதி பெறல் செயல்முறையினை 2021 ஆம் ஆண்டில் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கும் அதிகமான சராசரி வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன், பூடானின் பொருளாதாரம் எட்டு மடங்குக்கு மேல் வளர்ச்சிப் பெற்று உள்ளது.
இந்தியாவிற்குப் பூடான் நாட்டினால் மேற்கொள்ளப்படும் புனல் மின்னாற்றல் ஏற்றுமதியானது தற்போது அதன் பொருளாதாரத்தில் 20% ஆகும்.
குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வரையறை: குறைந்த அளவிலான வருமானம், மனித மூலதனம் மற்றும் பொருளாதாரப் பன்முகத் தன்மை, அதிக அளவில் பொருளாதார பாதிப்புள்ளாகும் நிலை மற்றும் வேளாண்மை, இயற்கை வளங்கள் மற்றும் முதன்மை தொழில்துறைப் பொருட்கள் ஆகியவற்றினை விகிதம் சாரா அளவில் சார்ந்த மக்கள் தொகை ஆகியவற்றுடன் கூடிய சமூகப் பொருளாதார வளர்ச்சியின் மிகக் குறைந்தக் குறிகாட்டிகளை வெளிப்படுத்தும் நாடு என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையானது, தற்போது 46 நாடுகளைக் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகளாக அங்கீகரித்துள்ளது.
இதில் கரீபியன் பகுதியில் இருந்து ஒன்றும், ஆசியாவில் இருந்து ஒன்பது நாடுகளும், ஆப்பிரிக்காவில் இருந்து 33 நாடுகளும் மற்றும் பசிபிக் பகுதியில் இருந்து 3 நாடுகளும் அடங்கும்.