TNPSC Thervupettagam

குற்றவியல் அவதூறு பேச்சு தொடர்பான சட்டம்

February 11 , 2024 160 days 216 0
  • இந்தியாவின் 22வது சட்ட ஆணையம் ஆனது, “குற்றவியல் அவதூறு பேச்சு தொடர்பான சட்டம்” என்ற தலைப்பிலான தனது 285வது அறிக்கையினை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
  • இந்தியாவில் குற்றவியல் சட்டங்களின் கட்டமைப்பிற்குள் குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடர வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  • நற்பெயருக்கான உரிமை என்பது வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றினை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 21வது சட்டப் பிரிவிலிருந்து பெறப்பட்டது.
  • குற்றவியல் அவதூறு தொடர்பான சட்டத்தைச் சார்ந்துள்ள சட்டவியல் கோட்பாடுகள் ஆனது ஒருவரின் நற்பெயரையும் அதன் அம்சங்களையும் பாதுகாக்கும் சாராம்சத்தைக் கொண்டுள்ளன.
  • அவதூறான பேச்சுகளுக்கு குற்றவியல் வழக்குத் தொடரப்படுவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற வாதத்திற்கு உள்ளாகக் கூடும் என்பது குறிப்பிடத் தக்கது.
  • தீங்கு விளைவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் அவதூறு பேச்சினால், அத்தகைய தீங்கு உண்மையில் ஏற்படும் போது மட்டுமே அந்த அவதூறு பேச்சு சட்டவிரோதமாக கருதப்பட வேண்டும்.
  • 2023 ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதா ஆனது, சமூக சேவை செய்தலை இந்தக் குற்றத்திற்கான கூடுதல் தண்டனையாக சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்