உள்ளிடை இயங்கு (பரிமாற்ற) தன்மையிலான நீதி அமைப்பு (ICJS) தளத்தில் அதிக வழக்குகளைப் பதிவு செய்வதில் உத்தரப் பிரதேசம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ICJS தளத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் இதுவரை 1.56 கோடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
35 லட்சம் பதிவுகளுடன் மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 16 லட்சம் பதிவுகளுடன் பீகார் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ICJS என்பது உச்ச நீதிமன்றத்தின் இணைய குழுவினால் கருத்துருவாக்கம் செய்யப் பட்டு உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த தளம் ஆனது, நாடு முழுவதும் உள்ள குற்றவியல் நீதி அமைப்பின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையில் தரவு மற்றும் தகவல்களை தடையின்றி இடமாற்றுவதற்கு உதவுகிறது.
இவற்றில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தரவுகள் ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் நீதிமன்றங்கள், காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படுகிறது.