செயற்கைக்கோள் ஏவு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதன் காரணமாக, இஸ்ரோ அமைப்பானது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திற்கு அடுத்து தனது இரண்டாவது விண்வெளித் தளத்தை தமிழ்நாட்டில் கட்டமைக்கத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் அருகே செயற்கைக் கோள் ஏவுதளத்தை அமைக்கும் திட்டத்தை மத்திய விண்வெளித் துறை அமைச்சரான ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
இது முக்கியமாக புதிதாக மேம்படுத்தப்பட்ட சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகன (SSLV or mini-PSLV) ஏவுதல்களைப் பூர்த்தி செய்ய இருக்கின்றது.