TNPSC Thervupettagam

குலுக்கல் பரிசுச் சீட்டு வரிவிதிப்பு ஆணையத்தின் விதிகள்

February 17 , 2025 10 days 84 0
  • குலுக்கல் பரிசுச் சீட்டுகளின் விற்பனை மீது வரி விதிக்க வேண்டி மாநில அரசுகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும்  மத்திய அரசுக்கு அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் உள்ள 62வது உட்சேர்ப்பின் படி, குலுக்கல் பரிசுச் சீட்டு ஆனது "பந்தயம் மற்றும் சூதாட்டம்" என்ற வரையறையின் கீழ் வருகின்றன.
  • இவற்றின் மீது வரி விதிக்க மாநிலச் சட்டமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.
  • இந்த குலுக்கல் பரிசுச் சீட்டுகளின் பயன்பாடானது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதோடு சில மாநிலங்கள் மட்டுமே இந்த குலுக்கல் பரிசுச் சீட்டுகளை அனுமதித்து, அவற்றை ஒழுங்குபடுத்துகின்றன என்ற நிலையில் மற்ற மாநிலங்கள் அவற்றை முற்றிலுமாக தடை செய்துள்ளன.
  • மத்திய அரசு ஆனது 2010, 2012, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நிதிச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து குலுக்கல் பரிசுச் சீட்டு தொடர்பான சில நடவடிக்கைகளுக்கு சேவை வரி விதிக்க முயன்றது.
  • குலுக்கல் பரிசுச் சீட்டுகளின் விநியோகம், ஊக்குவிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை வரி விதிக்கக் கூடிய "சேவை" என்று மத்திய அரசு வாதிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்