TNPSC Thervupettagam
August 27 , 2018 2185 days 617 0
  • முதுபெரும் பத்திரிக்கையாளர், ஆசிரியர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலரான குல்தீப் நய்யர் (95) 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ல் புது தில்லியில் மறைந்தார்.
  • நய்யர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார் மற்றும் “வித்அவுட் பியர் : தி லைப் அண்ட் டிரய்ல் ஆப் பகத் சிங்”, “நேருவிற்குப் பின் இந்தியா”, மற்றும் “எமர்ஜென்சி ரீடோல்டு” உள்ளிட்ட 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • நெருக்கடி நிலையின் போது நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • பத்திரிக்கைத் துறையில் இவது பங்களிப்பின் காரணமாக 2015ஆம் ஆண்டில் இவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இவ்விருது ராம்நாத் கோயங்கா சிறந்த விருதுகளின் 8வது பதிப்பின் போது வழங்கப்பட்டது.
  • இவர் 1990-ல் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் மேலவையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்