TNPSC Thervupettagam

குளிர்கால ஒலிம்பிக் - நோரோ வைரஸ்

February 17 , 2018 2476 days 861 0
  • தென்கொரிய தலைநகர் பியோங்சாங்கில் (Pyeongchang) நடைபெற்று வரும் 23 வது சர்வதேச குளிர்கால ஒலிம்பிக் (Winter olympic Games) தொடர் நோரோ வைரஸின் (Norovirus) நோய் தாக்குதலுக்கு மோசமாக உள்ளாகியுள்ளது.
  • வயிற்றுப் போக்கை (diarrhea) உண்டாக்கும் ரோடா வைரஸை (Rota virus) ஒத்தது இந்த நோரோ வைரஸ்.
  • அனைத்து வகை வயதுப் பிரிவினரையும் பாதிக்கும் இந்த வைரஸானது மிகவும் தொற்றுத் தன்மை வாய்ந்தது.
  • தற்போது நடப்பில் இந்த வைரஸிற்கு எதிராக எத்தகு தடுப்பூசியும் இல்லை.
  • திடீர் வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிற்று வலி, தலைவலி, காய்ச்சல் ஆகியவை இந்த வைரஸின் தாக்குதலால் உண்டாகும் பாதிப்புகளாகும்.
  • இந்த வைரஸ் முதன்மையாக வாய் மற்றும் மலக்கழிவு (oral-faecal) வழியாக பரவக் கூடியது.
  • நோய் தொற்று கலந்த (Contaminated) உணவு மற்றும் நீர் வழியாகவும் இந்த வைரஸ் பரவக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்