தென்கொரிய தலைநகர் பியோங்சாங்கில் (Pyeongchang) நடைபெற்று வரும் 23 வது சர்வதேச குளிர்கால ஒலிம்பிக் (Winter olympic Games) தொடர் நோரோ வைரஸின் (Norovirus) நோய் தாக்குதலுக்கு மோசமாக உள்ளாகியுள்ளது.
வயிற்றுப் போக்கை (diarrhea) உண்டாக்கும் ரோடா வைரஸை (Rota virus) ஒத்தது இந்த நோரோ வைரஸ்.
அனைத்து வகை வயதுப் பிரிவினரையும் பாதிக்கும் இந்த வைரஸானது மிகவும் தொற்றுத் தன்மை வாய்ந்தது.
தற்போது நடப்பில் இந்த வைரஸிற்கு எதிராக எத்தகு தடுப்பூசியும் இல்லை.
திடீர் வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிற்று வலி, தலைவலி, காய்ச்சல் ஆகியவை இந்த வைரஸின் தாக்குதலால் உண்டாகும் பாதிப்புகளாகும்.
இந்த வைரஸ் முதன்மையாக வாய் மற்றும் மலக்கழிவு (oral-faecal) வழியாக பரவக் கூடியது.
நோய் தொற்று கலந்த (Contaminated) உணவு மற்றும் நீர் வழியாகவும் இந்த வைரஸ் பரவக் கூடியது.