மாநிலத்தில் விளிம்பு நிலையிலுள்ள கிராமத்தினருடைய (fringe villagers) உள்ளூர் உணவு மற்றும கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் அஸ்ஸாம் குளிர்கால திருவிழாவானது (Assam Spring Festival) அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மனாஸ் தேசியப் பூங்காவில் (Manas National Park) நடத்தப்பட்டுள்ளது.
சுவன்கர் மிதிங்கா ஓன்சாய் அபாத் (Swankar Mithinga Onsai Afat) எனும் அமைப்பும் இந்திய நெசவாளர்கள் சங்கமும் (Indian Weavers’ Association) இணைந்து இந்தத் திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளன.
மனாஸ் தேசியப் பூங்காவானது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக இயற்கைப் பாரம்பரிய இடமாகும் (UNESCO Natural World Heritage site).
மேலும், இந்தப் பூங்காவானது ஒரு புலிகள் காப்பகம் (Project Tiger reserve), உயிர்க்கோள காப்பகம் (biosphere reserve) மற்றும் யானைகள் காப்பகம் (elephant reserve) ஆகியவற்றைக் கொண்டதாகும்.
மனாஸ் தேசியப் பூங்காவின் வழியே பிரம்மபுத்திரா நதியின் முக்கிய கிளை நதியான மனாஸ் நதி (Manas river) ஓடுகின்றது.
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மனாஸ் தேசியப் பூங்காவானது பூடான் நாட்டில் அமைந்துள்ள ராயல் மனாஸ் தேசியப் பூங்காவினை ஒட்டி (Royal Manas National Park) அதனருகே அமைந்துள்ளது.
புலிகள், இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், இந்திய யானைகள் போன்ற பல்வேறு ஆபத்துக்குள்ளான இனங்கள் உட்பட பல்வேறு வகையான வன உயிர்கள் இத்தேசிய பூங்காவில் காணப்படுகின்றன.