குளிர்கால மற்றும் கோடைக்கால நீண்ட பகல் மற்றும் நீண்ட இரவு நாள் - டிசம்பர் 21
December 24 , 2018 2163 days 3514 0
ஒரு ஆண்டின் மிக நீண்ட மற்றும் மிக குறைந்த பகல் பொழுதைக் கொண்ட நாள் நீண்ட பகல்-இரவு நாள் (Solstices) எனப்படும்.
வட துருவத்தில் ஒரு ஆண்டில் ஒரு நாளில் குறைந்த பகல் பொழுது காணப்படுகிறது. இது குளிர் கால நீண்ட இரவு நாள் எனப்படும் (Winter solstice).
தென் துருவத்தில் ஒரு ஆண்டில் ஒரு நாளில் நீண்ட பகல் பொழுது காணப்படுகிறது. இது கோடைக் கால நீண்ட பகல் நாள் எனப்படும் (Summer Solstice).
ஜூன் 21 ஆம் தேதி இந்த நிலைகள் தலைகீழாக மாறுகின்றன. அதாவது அந்த நாள் வட துருவத்தில் கோடைக் கால நீண்ட பகல் நாளாகவும் தென் துருவத்தில் குளிர் கால நீண்ட இரவு நாளாகவும் இருக்கும்.
இது பூமியின் சாய்வு மற்றும் சூரியனைச் சுற்றி அதன் நீள்வட்டப்பாதை ஆகியவற்றின் மூலம் ஏற்படுகிறது.