தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் நகரில் உள்ள CEAT தொழிற்சாலை மற்றும் அசாமின் டின்சுகியாவில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் ஆகியவை உலகப் பொருளாதார மன்றத்தின் குளோபல் லைட்ஹவுஸ் நெட்வொர்க்கில் இணைந்துள்ளன.
இது உற்பத்தியில், மிகவும் அதிநவீன நான்காவது தொழில்துறைப் புரட்சி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னோடியாக இருக்கும் தொழில்துறை நிறுவனங்களின் சமூகமாகும்.
WEF நிறுவனமானது இந்த வலையமைப்பில் 18 புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்ற நிலையில் அவற்றுள் இரண்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் ஆகும்.