TNPSC Thervupettagam

குழந்தை இறப்பு நிலைகள் மற்றும் போக்குகள் அறிக்கை 2020

September 14 , 2020 1533 days 759 0
  • ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் புதிய அறிக்கையின் படி, இந்தியாவில் 1990 ஆம் ஆண்டில் 126 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதமானது 2019 ஆம் ஆண்டில் 34 ஆக குறைந்துள்ளது.
  • 1990-2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து வயதுக்குட்பட்டோர் வருடாந்திர இறப்பு விகிதத்தில் இந்தியாவானது 4.5 சதவீதத்தைக் குறைத்துள்ளது.
  • நைஜீரியாவுடன் இணைந்து இந்தியாவானது 2019 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.
  • இந்தியாவில் 1990 ஆம் ஆண்டில் 89 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதமானது   2019 ஆம் ஆண்டில் 28 ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதமும் 1990 முதல் 2019 வரையிலான ஆண்டுகளுக்கிடையில் 57 என்ற எண்ணிக்கையில் இருந்து 22 ஆகக் குறைந்துள்ளது.

மற்ற நாடுகளில்

  • உலகளவில் 1990 ஆண்டில் 12.5 மில்லியனாக இருந்த ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகள் எண்ணிக்கையானது 2019 ஆண்டில் மிகக் குறைந்த அளவாக, 5.2 மில்லியனாக பதிவாகியுள்ளது.
  • மத்திய மற்றும் தெற்கு ஆசியா, ஓசியானியா (நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர) ஆகிய பகுதிகள் 2000-2009 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2010-2019 ஆண்டுகளில் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்பு விகிதத்தில் வேகமான சரிவைக் கண்டுள்ளன.
  • இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகளில் சுமார் 53% ஆப்பிரிக்காவில் துணை-சஹாராப் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் ஐந்து வயதை எட்டுவதற்கு முன்பு சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகளில் 49 சதவீதமானது வெறும் ஐந்து நாடுகளில் நிகழ்ந்துள்ளது. அவை: இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் எத்தியோப்பியா ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்