குழந்தை இறப்பு நிலைகள் மற்றும் போக்குகள் அறிக்கை 2020
September 14 , 2020 1533 days 758 0
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் புதிய அறிக்கையின் படி, இந்தியாவில் 1990 ஆம் ஆண்டில் 126 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதமானது 2019 ஆம் ஆண்டில் 34 ஆக குறைந்துள்ளது.
1990-2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து வயதுக்குட்பட்டோர் வருடாந்திர இறப்பு விகிதத்தில் இந்தியாவானது 4.5 சதவீதத்தைக் குறைத்துள்ளது.
நைஜீரியாவுடன் இணைந்து இந்தியாவானது 2019 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.
இந்தியாவில் 1990 ஆம் ஆண்டில் 89 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதமானது 2019 ஆம் ஆண்டில் 28 ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதமும் 1990 முதல் 2019 வரையிலான ஆண்டுகளுக்கிடையில் 57 என்ற எண்ணிக்கையில் இருந்து 22 ஆகக் குறைந்துள்ளது.
மற்ற நாடுகளில்
உலகளவில் 1990 ஆண்டில் 12.5 மில்லியனாக இருந்த ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகள் எண்ணிக்கையானது 2019 ஆண்டில் மிகக் குறைந்த அளவாக, 5.2 மில்லியனாக பதிவாகியுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு ஆசியா, ஓசியானியா (நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர) ஆகிய பகுதிகள் 2000-2009 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2010-2019 ஆண்டுகளில் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்பு விகிதத்தில் வேகமான சரிவைக் கண்டுள்ளன.
இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகளில் சுமார் 53% ஆப்பிரிக்காவில் துணை-சஹாராப் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையாகும்.
2019 ஆம் ஆண்டில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் ஐந்து வயதை எட்டுவதற்கு முன்பு சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்புகளில் 49 சதவீதமானது வெறும் ஐந்து நாடுகளில் நிகழ்ந்துள்ளது. அவை: இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் எத்தியோப்பியா ஆகியனவாகும்.