குழந்தை உயிரிழப்பு விகிதத்தின் நிலைகள் மற்றும் போக்குகள் 2024
April 3 , 2025 8 hrs 0 min 30 0
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உயிரிழப்பு மதிப்பீட்டு நிறுவனக் குழுவானது (UNIGME) 2024 ஆம் ஆண்டிற்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.
2000 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதத்தில் சுமார் 70 சதவீதச் சரிவும், பச்சிளம் குழந்தை உயரிழப்பு விகிதத்தில் 61 சதவீதச் சரிவும் பதிவாகியுள்ளது.
கருவில் உள்ள குழந்தைகளின் உயிரிழப்பு விகிதத்தை 60-70 சதவீதம் என்ற அதிக வரம்பு வரை குறைத்த முதல் 10 நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.
2000-2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளவிலான 37 சதவீதக் குறைப்புடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கருவில் உள்ள குழந்தைகளின் உயிரிழப்பு விகிதத்தில் 60.4 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளது.
உலகளவில், 2022 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மீதான உயிர் இழப்புகளின் வருடாந்திர எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் பதிவான ஒரு மதிப்பீட்டில் 9.9 மில்லியனில் இருந்து 4.9 மில்லியனாகப் பாதிக்கும் மேலாகக் குறைந்துள்ளது.
2000 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலக நாடுகளானது 221 மில்லியன் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை இழந்தது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புப் போக்கானது, 2000 ஆம் ஆண்டில் 41 சதவீதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டில் 47% ஆக அதிகரித்துள்ளது.