TNPSC Thervupettagam

குழந்தை திருமணங்களின் சரிவு

March 8 , 2018 2456 days 790 0
  • குறிப்பிடும் விதமாக, கடைசி பத்தாண்டுகளில் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு முன் 47 சதவீதம் என்ற நிலையிலிருந்த 18 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளின் குழந்தைத் திருமணம் தற்போது 27 சதவீதமாக குறைந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
  • மேலும் உலகளவில் குழந்தைகள் வயதில் திருமணம் செய்து வைக்கப்படும் பெண் குழந்தைகள் வீதம் கடைசி பத்தாண்டுகளில் 15 சதவீதம் குறைந்துள்ளது. 4ல் ஒரு பெண் குழந்தைக்கு குழந்தை திருமணம் நடத்தபடுகின்றது என்ற விகிதமானது தற்போது 5ல் ஒரு பெண் குழந்தைக்கு என மாறியுள்ளது.
  • 2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 25 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
  • பெருவாரியான குழந்தைத் திருமண தடுப்புகள் தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்  இந்தியா    முன்வரிசையில் உள்ளது.
    • பெண் கல்வி விகிதம் அதிகரிப்பும்
    • வளரிளம் பெண்கள் மீதான அரசின் செயற்பூர்வ முதலீடும்
    • குழந்தை திருமணங்களால் உண்டாகும்  தீமைகள் மற்றும் அவற்றின் சட்ட விரோதத்தன்மை பற்றிய மக்களிடையேயான வலுவான பொது விழிப்புணர்வும்

-குழந்தைத் திருமணங்களின் சரிவிற்கு முக்கிய காரணங்கள் என ஐ.நா.குழந்தைகள் நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்