தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) அறிக்கையின் படி, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கப் படும் மோசமான ஒரு நிலையை எதிர் கொள்ளும் நிலையில் உள்ளனர்.
உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஆனது குழந்தைத் திருமணத்தினை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் உள்ளன.
சுமார் 5,00,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் எண்ணிக்கையினைக் கொண்ட உத்தரப் பிரதேசம் ஆனது, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் வலுவான சில நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளச் செய்வதில் முன்னணியில் உள்ளன.