மிக உயர் நிலை குழந்தை உரிமைகள் அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஆனது, ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்களை 'குழந்தைத் தொழிலாளர் அற்றவை' என்று அறிவித்துள்ளது.
இந்தச் சுரங்கங்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பு குழந்தைத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டனர்.
கைலாஷ் சத்யார்த்தியின் லாப நோக்கற்ற அமைப்பான பச்பன் பச்சாவ் அந்தோலன் (BBA) அமைப்பானது, 'குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மைக்கா சுரங்கங்கள்' என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்தது.