மகாராஷ்டிர மாநில அரசானது சமீபத்தில் குழந்தைகளின் பராமரிப்பிற்காக ஆண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது.
இதன்படி, அவரின் மனைவி மனநல பிரச்சினைகள் காரணமாக குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாத போதோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதோ அதே காலகட்டத்தில் விடுப்பு பெற மாநில அரசின் ஆண் பணியாளர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
ஒரு நாள்காட்டி வருடத்தில் 3 கட்டங்களில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் இதன் அதிகபட்ச விடுப்பு காலம் 180 நாட்களாக இருக்கும்.