குழந்தைகளைப் பாதுகாப்போம் (Save the Children’s) எனும் அமைப்பின் 2018 ஆம் ஆண்டின் “குழந்தைப் பருவ முடிவுக் குறியீட்டின்” (End of Childhood Index 2018) படி, 175 நாடுகளுள் இந்தியா 113-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு 116-வது இடத்திலிருந்த இந்தியா இவ்வாண்டு மூன்று இடங்கள் முன்னேறி 113-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இக்குறியீட்டில் சிங்கப்பூர் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய இரு நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. நைஜீரியா கடைசி இடத்தை அதாவது 175-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இக்குறியீட்டில் அமெரிக்கா மற்றும் இரஷ்யா 36 மற்றும் 37 இடத்திலும், சீனா 40வது இடத்திலும் உள்ளன.
இக்குறியீடானது உலக நாடுகள் மேற்கொள்ளும் குழந்தைத் திருமணங்கள் குறைப்பு விகிதத்தின் மேம்பாட்டினை கணக்கிடுகிறது. “விலக்குதலின் பல்வேறு முகம்” (The Many Faces of Exclusion) எனும் அறிக்கையின் ஒரு பகுதியே இக்குறியீடாகும்.
இக்குறியீடானது உலக அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் (under five mortality rate) ஆயிரம் உயிருள்ள பிறப்புகளுக்கு (deaths per 1000 live births) 43 எனச் சுட்டியுள்ளது.
மேலும் குழந்தைகள் வளர்ச்சி குன்றலை (Child Stunting) - அதாவது 0-59 மாத வயதுடைய குழந்தைகள் வளர்ச்சி குன்றலை4 சதவீதம் என்று அறிவித்துள்ளது.