குழந்தைகளின் உயிர் பிழைப்பு மற்றும் ஆரோக்கியக் குறியீடு
December 28 , 2024 62 days 109 0
இந்திய ஆராய்ச்சியாளர்கள் குழு, தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் தரவைப் பயன்படுத்தி இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான குழந்தைகளின் உயிர் பிழைப்பு மற்றும் ஆரோக்கியக் குறியீட்டினை (CSHI) உருவாக்கி உள்ளது.
ஒருங்கிணைந்த CSHI ஆனது கடந்த கால அடிப்படையிலும் மற்றும் எதிர்காலத்தின் அடிப்படையிலும் இந்தியா மற்றும் அதன் பல்வேறு மாநிலங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
குழந்தைகளின் உயிர் பிழைப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் குறிக்கும் 11 முக்கிய குறிகாட்டிகளில்:
மக்கள்தொகை மற்றும் குடும்பத் தகவல் விவரங்கள் குறித்த 3 குறிகாட்டிகள்,
பச்சிளம் குழந்தை/குழந்தை உயிரிழப்பு விகிதங்கள், பேறுகாலத் தாய்மார்கள் பராமரிப்பு, மகப்பேறு காலப் பராமரிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் குழந்தைகள் மத்தியில் நிலவும் இரத்த சோகை பாதிப்பு ஆகிய ஒவ்வொன்றினை பற்றிய தலா 1 குறிகாட்டி மற்றும்
குழந்தைகளுக்கு உணவளிக்கும் பல செயல்முறைகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச் சத்து நிலை ஆகியவை குறித்த 3 குறிகாட்டிகள் ஆகியவை அடங்கும்.
ஒப்பீடுகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு குறிகாட்டிகளுக்கும் சமமான மதிப்பீடு ஒதுக்கப்பட்டது.
அவற்றின் மதிப்பீட்டின் படி, சுமார் 0.49 ஆக இருந்த இந்தியாவின் CSHI மதிப்பு ஆனது 4 ஆண்டுகளில் 0.52 ஆக அதிகரித்துள்ளதோடு, இது இந்தியாவினைச் சிறந்த ஒரு செயல் திறன் கொண்ட வகைக்கு மேம்படுத்துகிறது.
ஆனால் தற்போதையப் போக்கு தொடர்ந்தால், இந்தியா தனது CSHI மதிப்பை 0.75 ஆக உயர்த்தி முன்னணி இடத்தை அடைய சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.
35 பிராந்தியங்களில், லட்சத்தீவு, புதுச்சேரி, கேரளா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 பிராந்தியங்கள் மிகவும் சிறந்தச் செயல்திறன் கொண்டவை என வகைப் படுத்தப் பட்டுள்ளன.
இதில் 25 பிராந்தியங்கள் நல்ல முறையிலான செயல் திறன் கொண்டவையாகவும், 5 பிராந்தியங்கள் குறைவான செயல்திறன் கொண்டவையாகவும் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.