யுனிசெஃப் அமைப்பானது, உலக சுகாதார அமைப்பின் காயங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மையத்துடன் இணைந்து, NIMHANS என்ற நிறுவனத்தில் இந்தியாவில் குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்காக வேண்டி சாலைப் பாதுகாப்பிற்கான தேசிய செயல் திட்டத்தினை வெளியிட்டது.
இது குழந்தைகளிடையே சாலைப் போக்குவரத்து விபத்தினால் ஏற்படும் காயங்கள் (RTI) குறித்த மேசமான புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே பதிவாகும் அதிகமான உயிரிழப்பிற்கு RTI தற்போது முக்கிய காரணமாக உள்ளது என்பதோடு இது அனைத்து சாலை விபத்து சார்ந்த உயிரிழப்புகளிலும் 10% ஆகும்.
ஒவ்வொரு நாளும், நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 45 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டில் மட்டும், இந்த வயது குழுவினரிடையே சுமார் 16,443 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, இருப்பினும் குறைவான அறிக்கையிடல் காரணமாக உண்மையான எண்ணிக்கை 20% அதிகமாக இருக்கலாம்.
2011 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சாலை விபத்துகளில் சுமார் 198,236 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த உயிரிழப்புகளில் சுமார் 75% ஆனது 14 முதல் 17 வயது உடையவர்களிடையே பதிவாகியுள்ளன, மேலும் கடந்த பத்தாண்டுகளில் இந்த வயது குழுவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.