உலக வங்கி குழு மற்றும் UNICEF யுனிசெஃப் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட சர்வதேச வறுமைக் கோடு வரம்பின் படி குழந்தைகளின் பண வறுமையின் உலகளாவியப் போக்குகள் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மிக ஏழ்மையான மக்கள் தொகையின் எண்ணிக்கையானது குழந்தைகளின் எண்ணிக்கையால் அதிகரித்து வருகிறது.
குழந்தைகளின் வறுமை குறித்த சமீபத்திய மதிப்பீடு ஆனது 2.15 டாலர் என்ற புதிய வறுமைக் கோடு வரம்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், உலகின் மொத்த ஏழை மக்கள் தொகையில் 52.5 சதவீதம் பேர் குழந்தைகளாக உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், உலகில் உள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் 15.9 சதவீதம் பேர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழ்ந்தனர் என்ற நிலையில் இது வளர் இளம் பருவத்தினர் மத்தியில் 6.6 சதவீதமாக இருந்தது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி, 11.5 சதவீதக் குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழ்கின்றனர்.
எண்ணிக்கையில், 52 மில்லியன் இந்தியக் குழந்தைகள் ஏழைகளாக உள்ளனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழும் குழந்தைகளில் 18.3 சதவீதம் (99 மில்லியன்) பேர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான 2.15 டாலர் என்ற புதிய வறுமைக் கோடு வரம்பில் உள்ள சராசரி வறுமை இடைவெளியானது வளர் இளம் பருவத்தினரை விட (1.9 சதவீதம்) அதிகமாக 5.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது.