TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான உலகின் முதல் மலேரியா தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டம்

February 3 , 2024 167 days 209 0
  • ஆப்பிரிக்காவில் முதல் முறையாக மலேரியா தடுப்பு மருந்தினை குழந்தைகளுக்கு அளிக்க உள்ள முதல் நாடு கேமரூன் நாடு ஆகும்.
  • உலகில் மலேரியா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில் 95% பங்கினைக் கொண்டு உள்ள இந்தக் கண்டத்தில், கொசுக்களால் பரவும் மலேரியா நோயைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்காவில், இந்த ஒட்டுண்ணி நோயால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 250 மில்லியன் நோய்ப் பாதிப்புகள் பதிவாகின்ற நிலையில், இதில் 6,00,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதொடு இவற்றில் மிகப் பெரும்பாலும் சிறு குழந்தைகளில் பதிவானவை ஆகும்.
  • கேமரூன் நாடானது, சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு மலேரியா தடுப்பூசிகளில் முதலாவதாக மாஸ்கியூரிக்ஸ் தடுப்பூசியினைப் பயன்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்