TNPSC Thervupettagam

குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை

April 29 , 2018 2275 days 660 0
  • 12 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்குவற்கான குற்றவியல் சட்ட திருத்தத்திற்கான அவசரச் சட்டத்திற்கானப் பிரகடனத்திற்கு (Criminal Law (Amendment) Ordinance) மத்திய கேபினேட் அனுமதி அளித்துள்ளது.
  • இந்த அவசரச் சட்டமானது இந்திய தண்டனைச் சட்டத்தையும் (Indian Penal Code -IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் (Criminal Procedure Code-CrPC), 2012 ஆம் ஆண்டின் பாலியல்குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தையும் (Protection of Children from Sexual Offences - POCSO Act 2012), 1872 ஆம் ஆண்டின் இந்திய சாட்சிச் சட்டத்தையும் (Indian Evidence Act) திருத்தம் செய்ய உள்ளது.
  • மேலும் இந்த குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கான அவசரச் சட்டம் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau -NCRB) மூலம் பாலியல் குற்றவாளிகளின் சுய விவரங்கள் (profile) மற்றும் தேசிய பாலியல் பலாத்கார நிகழ்வுகளின் தரவுத் தளங்களை (National database) பராமரிப்பதற்கான சட்டக் கூறினையும் கொண்டுள்ளது.
  • காவல்துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் பலாத்கார வழக்குகளின் விசாரணை, வழக்கு பின்தொடரல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்காக இத்தரவுகளானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பகிரப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்