மாதிரி பதிவு கணக்கெடுப்பு அறிக்கையின் படி (Sample Registration Survey) இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் [IMR - Infant Mortality Rate] 3 புள்ளிகள் (8%) குறைந்துள்ளது. 2015-ல் 1000 பிறப்புகளுக்கு 37 ஆக இருந்த IMR விகிதம் 2016 இல் 1000 பிறப்புகளுக்கு 34 ஆக குறைந்துள்ளது.
இந்தியா முதன் முறையாக 20 மில்லியனுக்கு குறைவான அளவில் பிறப்பு விகிதத்தில் மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் உயிர்வாழ்தலுக்கான பாலின இடைவெளி (Gender Gap for Child Survival) சீராக குறைந்து வருகிறது. அரசின் "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்திற்கு ஊக்கம் தரும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான IMR-ன் பாலின வித்தியாசம் தற்போது <10% என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
அஸ்ஸாம் மற்றும் மேம்பட்ட செயல் குழுவின் (Empowered Action Group) 8 மாநிலங்களில் ஜார்க்கண்ட் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் 2015 ஆண்டினை ஒப்பிடுகையில் IMR விகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
IMR
ஆயிரம் பிறப்புகளுக்கு, ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை விகிதமே குழந்தை இறப்பு விகிதம் எனப்படும்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்க இயலா அளவிற்கு மக்கட் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த இயலாமல் பின் தங்கியுள்ள 8 மாநிலங்களில் ( பீகார் , ஜார்க்கண்ட், உத்திரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம் , சத்தீஸ்கர் , ஒரிசா , ராஜஸ்தான் ) பிராந்தியங்களுக்கு பொருந்தும் வகையில் திட்டங்கள் உருவாக்குவதற்கு மேம்பட்ட செயற்குழு (Empowered Action Group – EAG) அமைக்கப்பட்டது.
"பேட்டி பச்சாவோ பேட்டி பாடாவோ" திட்டமானது குறைந்து வரும் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை (CSR) தடுக்கும் வகையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போன்றவற்றின் கூட்டிணைவால் ஏற்படுத்தப்பட்ட தேசிய முன்னெடுப்பாகும்.