TNPSC Thervupettagam

குழந்தைகள் இறப்பு விகிதம் 2022

January 14 , 2023 679 days 664 0
  • 2021 ஆம் ஆண்டில், 5 மில்லியன் குழந்தைகள் தனது 5 வயதினை அடையும் முன்பே இறந்துள்ளனர்.
  • அதே ஆண்டில் 5 முதல் 24 வயதுக்குட்பட்ட 2.1 மில்லியன் அளவிலான குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
  • 2021 ஆம் ஆண்டில், உலகளவில் பதிவான ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 38 இறப்புகள் ஆக இருந்தது.
  • ஆனால் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் இந்த விகிதமானது 1,000 பிறப்புகளுக்கு 74 என்ற அளவில் உள்ளது.
  • குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், 2021 ஆம் ஆண்டில் பதிவான ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 67 இறப்புகள் ஆகும்.
  • அதிக வருமானம் உள்ள நாடுகளில் 1,000 பிறப்புகளுக்கு 5 இறப்புகள் என்ற விகிதமே பதிவாகியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா நாடுகள் மற்றும் தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் மற்ற எல்லாப் பகுதிகளையும் விட அதிகமான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இறப்பு ஆனது பதிவாகியுள்ளது.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் மற்றும் 5-24 வயதுக்குட்பட்ட நபர்களிடையே பதிவான 70 சதவீத இறப்புகள் ஆகியவை ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் தெற்கு ஆசியா ஆகிய நாடுகளிலேயே பதிவாகியுள்ளன.
  • குழந்தை பிறந்த முதல் 28 நாட்கள் அந்தக் குழந்தை உயிர்வாழ்வதற்குப் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் வகையிலான காலமாகும்.
  • 2021 ஆம் ஆண்டில், குழந்தை பிறந்த முதல் மாதத்தில் சுமார் 2.3 மில்லியன் குழந்தைகள் அல்லது ஒரு நாளைக்கு 6,400 குழந்தைகள் இறந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்