TNPSC Thervupettagam

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் சார்ந்த நடவடிக்கைகள்

September 30 , 2024 19 hrs 0 min 24 0
  • குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது, பதிவிறக்கம் செய்தல், சேமித்தல், வைத்திருப்பது, பரவச் செய்தல் அல்லது காட்சிப் படுத்துதல் ஆகியவை POCSO சட்டத்தின் கீழ் குற்றம் சார்ந்த பொறுப்புக் கூறலின் கீழ் வரும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்தத் தீர்ப்பு ஆனது இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
  • தனிநபர் ஒருவர் "ஒரு குழந்தை அல்லது குழந்தைகளை ஆபாச நோக்கங்களுக்காக நேரடியாகப் பயன்படுத்தாத வரையில்" அத்தகையப் படங்களை "வைத்திருப்பது மட்டும்" சட்டத்தை மீறுவதாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் முன்பு கூறியது.
  • ஆனால் உச்ச நீதிமன்றம் ஆனது ஒரு நபர் தனது ஈடுபாட்டுடன் தயாரிக்கவில்லை அல்லது பரவச் செய்யவில்லை என்றாலும், நேரடி உடைமை மட்டுமல்லாமல் அதன் "ஆக்கப் பூர்வமான உடைமையும்" POCSO சட்டத்தின் 15வது பிரிவின் கீழ் வரும் என்று முடிவு செய்தது.
  • ஆக்கப் பூர்வமான உடைமை என்பது ஒன்றன் கட்டுப்பாடு குறித்த தகவலோடு சேர்த்த ஒன்றின் மீதான முழுக் கட்டுப்பாடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்