குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பதற்குக் காரணமான ஜிகா வைரஸ் - கண்டுபிடிப்பு
August 2 , 2018 2306 days 726 0
குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பதற்குக் காரணமான ஜிகா வைரஸின் மூலக்கூறு மற்றும் செல்லுலார் இயக்கங்களை தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் (National Brain Research Centre - NBRC) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மைக்ரோசெப்லியுடன் பிறக்கும் குழந்தைகளின் தலை மற்ற குழந்தைகளின் தலையோடு ஒப்பிடும் போது சிறியதாக இருக்கும்.
ஜிகா வைரஸின் உறை புரதங்கள் (E புரதம்) மூளை தண்டு உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் செல்ல காரணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த உறை புரதமானது கருவில் உள்ள நரம்புத் தண்டு உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடை செய்யும். மேலும் நரம்பு போன்று உருவெடுக்கும் உயிரணுக்களை இந்த உறை புரதங்கள் கொன்றுவிடுகின்றன.
ஜிகா வைரஸின் உறை புரதங்களை (E-Protein) சீரமைப்பதன் மூலம் வளரும் கருவில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம் மற்றும் தடை செய்யலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.