சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளின் நினைவாக நவம்பர் 14 அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இவ்வருடம் நேருவின் 129 வது பிறந்தநாள் ஆகும்.
நேரு 1889, நவம்பர் 14ல் உத்திரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்தார்.
1964-க்கு முன்பு நவம்பர் 20 அன்று ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய குழந்தைகள் தினமானது இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டது.
1964 மே 27 அன்று நேர்ந்த நேருவின் மரணத்திற்குப் பிறகு அவரை கௌரவப்படுத்திட அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக (பால் திவாஸ்) கொண்டாட இந்தியா முடிவு செய்தது.