குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் - ஜூன் 12
June 13 , 2023 534 days 218 0
இது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பானது இந்த நாளை 2002 ஆம் ஆண்டில் நிறுவியது.
உலகளவில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களில் ஒவ்வொரு பத்து குழந்தைகளில் ஒன்பது குழந்தைகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்கள் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, அனைவருக்குமான ‘சமூக நீதி. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்!’ என்பதாகும்.