சென்னை PBCCR (Chennai Population-Based Childhood Cancer Registry) ஆனது நாட்டின் முதல் பிரத்யேக குழந்தைப் பருவ புற்றுநோய் பதிவேடு ஆகும்.
இது 2022 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் 241 குழந்தைப் பருவப் புற்றுநோய் பாதிப்புகளை (19 வயதுக்குட்பட்ட 139 சிறுவர்கள் மற்றும் 102 சிறுமிகள்) அதில் பதிவு செய்தது.
தமிழ்நாட்டில் ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 96,000 புதிய நோயாளிகளில் 2,500 பேர் குழந்தைகள் ஆவர்.
இதன் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று, அறிகுறி தோன்றியதிலிருந்து நோயறிதல் வரையிலான சராசரி காலம் 12.5 நாட்கள் ஆகும்.
மேலும், நோயறிதலிலிருந்து சிகிச்சை தொடங்கும் வரையிலான சராசரி இடைவெளி காலம் இரண்டு நாட்கள் ஆகும்.
இதன்படி தெளிவாகக் கண்டறியப்பட்ட பாதிப்புகளில், சுமார் 81.2% பேர் நோய்க் குணப்படுத்தும் சிகிச்சையைப் பெற்றனர்.
இந்திய மக்கள்தொகை அடிப்படையிலான சில பதிவேடுகளில், சென்னையின் வயது வாரியான குழந்தைப் புற்றுநோய்ப் பாதிப்பு விகிதம் (ஒரு மில்லியனுக்கு 136.3) ஆனது நாட்டிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது.