TNPSC Thervupettagam

குழந்தையின்மை நிலவர மதிப்பீடுகள் 1990–2021 அறிக்கை

April 15 , 2023 590 days 260 0
  • 1990 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான அனைத்துத் தொடர்புடைய மற்றும் சார்பு ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் குழந்தையின்மையின் உலகளாவிய மற்றும் பிராந்திய நிலவரம் பற்றிய மதிப்பீடுகளை வழங்குவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
  • உலகளாவிய அளவில் வயது வந்தோர் பிரிவினரில் சுமார் 17.5 சதவீதம் பேர் குழந்தை இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலகளவில் ஏறத்தாழ ஆறில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் குழந்தையின்மை நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.
  • வாழ்நாள் முழுவதுமான கருவுறாமைப் பாதிப்பு ஆனது, உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் (23.2%) அதிகமாகவும் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் (10.7%) குறைவாகவும் இருப்பதாக தற்போதுள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன.
  • மதிப்பிடப்பட்ட காலகட்டம் சார்ந்த  கருவுறாமைப் பாதிப்பு ஆனது, உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் (16.4%) அதிகமாகவும், கிழக்கு மத்தியத் தரைக் கடல் பகுதியில் குறைவாகவும் (10.0%) உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்