TNPSC Thervupettagam
October 24 , 2022 637 days 420 0
  • மேம்பட்ட விண்வெளி சார்ந்த சூரிய ஆய்வகக் கலமானது (ASO-S) சீன நாட்டினால் லாங் மார்ச்-2டி கேரியர் என்ற விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • சூரியனை உள்ளீர்த்துத் தன்னுள் ஈர்க்க முயன்ற ஒரு புராண இராட்சசனின் பெயரால் இதற்கு குவாஃபு-1 என்று பெயரிடப்பட்டது.
  • "சூரிய உச்சநிலை" நேரத்தில் முன்பு கிடைத்திராத சூரியனின் படங்களை எடுத்து மற்றும் ஆய்வு செய்ய அறிவியலாளர்களுக்கு இது உதவும்.
  • சூரிய ஒளியின் உச்ச நிலையானது 2025 ஆம் ஆண்டில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • ASO-S என்பது சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கெனவே பிரத்தியேகமாக ஏவப்பட்ட சீனாவின் முதல் முழு அளவிலான செயற்கைக்கோள் ஆகும்.
  • இது உலகின் முதல் சூரிய தொலைநோக்கி ஆகும் என்பதோடு, இது சூரியக் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெளிப்புற வெப்ப வெளியேற்றம் ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டதாகும்.
  • இந்த ஆய்வுப் பணியானது, நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சூரிய ஆய்வு சுற்றுக்கலம் ஆகியவற்றைப் போன்றது.
  • சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக 2023 ஆம் ஆண்டில் ஆதித்யா-L1 என்ற சூரிய ஆய்வுப் பணியை இந்தியா தொடங்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்