வானியலாளர்கள் முதன்முதலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பேரண்டத்தின் பிரகாசமான மற்றும் மிக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படும் குவாசர்களைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் அவற்றின் தோற்றம் பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை.
தற்போது, இந்த வானியல் பொருட்கள் உருவாக்கப் படுவதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குவாசர்கள் என்பது செயலில் உள்ள அண்ட உட்கருக்களின் ஒரு வகையாகும்.
அவை அண்டங்களின் மையத்தில் அமைந்துள்ள மாபெரும் கருந்துளைகளில் அமைந்துள்ளன.
அண்டங்களின் மோதலே குவாசர்களின் உருவாக்கத்தினைத் தூண்டுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குவாசர்களைக் கொண்டுள்ள அண்டங்கள் மற்ற அண்டங்களுடன் மோதுவதற்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆய்வு செய்யப்பட்ட குவாசர்களைக் கொண்டுள்ள அண்டங்களில் சுமார் 65% அண்டங்கள் முந்தைய காலங்களில் அண்ட இணைப்புகள் அல்லது மோதல்களை எதிர் கொண்ட அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்து உள்ளன.