இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு ஆனது ‘குவாட் (QUAD) ஒத்துழைப்பு அமைப்பின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நான்கு நாடுகளும் ஒன்று சேர்ந்தன என்பதோடு இந்த அமைப்பின் நோக்கம் "இந்தப் பகுதி மக்களுக்குச் சேவை செய்வது ஆகும்.
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே இந்தக் கருத்தாக்கத்தினை முன்வைத்ததுடன், 2007 ஆம் ஆண்டில் குவாட் அமைப்பு அதிகாரப்பூர்வமாக உருவானது.
முதல் அதிகாரப்பூர்வ குவாட் பேச்சுவார்த்தை 2017 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்றது.
சீனாவின் நெருக்கடி மற்றும் பிராந்தியப் பதற்றம் காரணமாக 2008 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா 2018 ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்தது.