TNPSC Thervupettagam

குவாட் அமைப்பின் 20 ஆம் ஆண்டு நிறைவு

January 5 , 2025 17 days 96 0
  • இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு ஆனது ‘குவாட் (QUAD) ஒத்துழைப்பு அமைப்பின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
  • 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நான்கு நாடுகளும் ஒன்று சேர்ந்தன என்பதோடு  இந்த அமைப்பின் நோக்கம் "இந்தப் பகுதி மக்களுக்குச் சேவை செய்வது ஆகும்.
  • ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே இந்தக் கருத்தாக்கத்தினை முன்வைத்ததுடன், 2007 ஆம் ஆண்டில் குவாட் அமைப்பு அதிகாரப்பூர்வமாக உருவானது.
  • முதல் அதிகாரப்பூர்வ குவாட் பேச்சுவார்த்தை 2017 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்றது.
  • சீனாவின் நெருக்கடி மற்றும் பிராந்தியப் பதற்றம் காரணமாக 2008 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா 2018 ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்