"Embracing the Quantum Economy: A Pathway for Business Leaders" என்று பெயரிடப்பட்ட ஒரு அறிக்கையினை உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது.
இது குவாண்டம் தொழில்நுட்பங்களின் மாறுதல் மிக்க திறனை எடுத்துக்காட்டுகிறது மற்றும் வணிகங்கள் அவற்றின் பொருளாதார மதிப்பைப் பயன்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தினை வழங்குகிறது.
உலகளாவிய குவாண்டம் தொழில்நுட்பச் சந்தை ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 125 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரம், நிதி, தளவாடங்கள் மற்றும் எரிசக்தி போன்ற துறைகள் கணிசமாக பயன் அயும்.
அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற குவாண்டம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டில் முதலீடு செய்யும் நாடுகள் ஆனது, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னணித்துவத்தில் பல்வேறு உத்தி சார் நன்மைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.