TNPSC Thervupettagam

குவாண்டம் மேலாதிக்கம்

October 28 , 2019 1729 days 851 0
  • சைக்காமோர் எனப்படும் நிறுவனத்தின் அதிநவீன குவாண்டம் கணினியைப் பயன்படுத்தி, கூகுள் நிறுவனமானது உலகின் மிக சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் "குவாண்டம் மேலாதிக்கத்தை" கோரியுள்ளது.
  • சைக்காமோர் 200 வினாடிகளில் ஒரு சிக்கலான கணக்கீட்டை நிறைவு செய்ததாக அது கூறியுள்ளது.
  • இன்று இருக்கும் மிக சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் இதே சிக்கலை முடிக்க சுமார் 10,000 ஆண்டுகள் ஆகும்.
  • சைக்காமோர் ஆனது ஒரு மீத்திறன் கொண்ட மேற்பொருந்துகை நிலையில் 53 க்யூபிட்களை சிக்க வைக்கக் கூடிய அதிமின் கடத்தும் உலோகத்தின் நுண்ணிய சுற்றுகளைக் கொண்டுள்ளது.

இது பற்றி
  • குவாண்டம் மேலாதிக்கம் (Quantum Supremacy - QS) என்பது எந்தவொரு நியாயமான காலக்கெடுவிலும் “கிளாசிக்கல்” (குவாண்டம் அல்லாத) கணினிகளால் நடைமுறையில் தீர்க்க முடியாத சிக்கல்களை குவாண்டம் கணினிகள் தீர்க்கக் கூடிய புள்ளியாகும்.
  • QS என்ற சொல் முதலில் அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளர் ஜான் பிரெஸ்கில் என்பவரால் பிரபலப் படுத்தப்பட்டது.
  • யூரி மானின் (1980) மற்றும் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் (1981) ஆகியோர் குவாண்டம் கணினியியலை முன்மொழிந்தனர்.
  • குவாண்டம் மேலாதிக்கம் ஆனது "குவாண்டம் நன்மை" என்றும் அழைக்கப் படுகிறது.
  • குவாண்டம் மேலாதிக்கக் கோட்டைக் கடக்க குறைந்தது 49 க்யூபிட்கள் தேவை என்று பொதுவாக நம்பப் படுகிறது.
க்யூபிட்கள்
  • கணினிகளில், பிட்கள் என்பவை “1” அல்லது “0” ஐக் குறிக்கும்.
  • இதற்கு நேர்மாறாக, க்யூபிட்கள் என்பவை “1” மற்றும் “0” ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு நிலையைக் குறிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்