TNPSC Thervupettagam

குவாமி ஏக்தா வாரம் (தேசிய ஒருமைப்பாட்டு வாரம்) நவம்பர் 19 முதல் 25 வரை

November 21 , 2018 2138 days 599 0
  • நவம்பர் 19 முதல் 25 வரை நாடு முழுவதும் குவாமி ஏக்தா வாரம் அல்லது தேசிய ஒருமைப்பாட்டு வாரம் அனுசரிக்கப்பட இருக்கின்றது.
  • இது தேசிய ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்க உணர்வையும் பலப்படுத்தி ஊக்குவிக்க அனுசரிக்கப்படுகின்றது.
  • ஒரு வாரகால அளவிலான இந்நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக நவம்பர் 19-ம் தேதியானது தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படும்.
  • குவாமி ஏக்தா வாரத்துடன் ஒன்றிணைந்துப் போகும் வகையில் மத நல்லிணக்கப் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்பான மதநல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு நடத்துகின்றது.
  • இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நவம்பர் 25-ம் தேதியன்று மத நல்லிணக்க கொடி நாள் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்