TNPSC Thervupettagam

குவாவார் குறுங்கோளினைச் சுற்றி காணப்படும் வளையம்

February 16 , 2023 521 days 268 0
  • சனிக் கோளினைச் சுற்றியுள்ள வளையம் போன்ற குவாவார் என்ற குறுங் கோளினைச் சுற்றி வளையம் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • குவாவார் புளூட்டோவின் விட்டத்தில் பாதியளவு மற்றும் பூமியின் துணைக்கோளின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்கினை விட சற்று குறைவாக உள்ளது.
  • இது புளூட்டோ அமைந்துள்ள மற்றும் நெப்டியூனுக்கு அப்பால் காணப்படும் உறைந்த விண்வெளிக் குப்பைகள் நிறைந்த பகுதியான கைபர் பட்டைப் பகுதியில் சூரியனைச் சுற்றி வருகிறது.
  • ஆனால் குவாவாரைச் சுற்றியுள்ள  வளையமானது, அத்தகைய வளையங்கள் எங்கு உருவாகலாம் என்பதினைப் பற்றிய தற்போதையப் புரிதலையும் விஞ்சுவதோடு, இது எங்கு அமைந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்ட தற்போதைய இடத்தினை விட வெகு தொலைவில் அமைந்துள்ளது.
  • 2002 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குவாவார் தற்போது ஒரு சிறிய கிரகமாக வரையறுக்கப் பட்டுள்ளதோடு, இது ஒரு குறுங்கோள் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • 2013 ஆம் ஆண்டில், சனி மற்றும் யுரேனஸுக்கு இடையில் உள்ள பகுதியில் சூரியனைச் சுற்றி வலம் வரும் சென்டார் என்று அழைக்கப்படுகின்ற சாரிக்லோவைச் சுற்றி இரண்டு வளையங்கள் இருப்பதனை வானியலாளர்கள் கண்டறிந்தனர்.
  • 2017 ஆம் ஆண்டில், கைபர் பட்டைப் பகுதியில் காணப்படும் ஹௌமியா எனப்படும் மற்றொரு கோளினைச் சுற்றி ஒரு வளையம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது ஒரு நட்சத்திர மண்டல மறைவின் போது மங்கலானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்